முன்பெல்லாம் 80 களில் பஞ்சாப் கலவரபூமி.
பாகிஸ்தான் ஆதரவுடன் அங்கே தீவிரவாதம் நடந்தது. 'சீக் முஸ்லீம் ஏக் ஹை' என்ற முழக்கத்தால் பெரும்பாலும் இந்துக்கள் இறப்பார்கள்.
பதிலுக்கு டெல்லியில் சீக்கியர்கள் தாக்கப்படுவர்.
இது தொடர்கதையானது.
பிறகு ஒரு வாக்கியம் பிரபலமானது...
"பஞ்சாப் கலவரங்களுக்கு தீர்வு டெல்லி தெருக்களில் அல்ல" என்று.
வி.பி.சிங் வந்தபின் சீக்கியர் கோபம் தணிந்தது. சீக்கிய தீவிரவாதிகளின் மறுசீரமைப்பு பலன் தந்தது.
ஐஎஸ்ஐ கவனம் அதை விட வாகான கஷ்மீர் பக்கம் திரும்பியது. கஷ்மீர் குல்மொஹர் கருகத் துவங்கியது.
பயங்கர வாதங்களில் அரசியல் சித்தாந்தங்களும் பன்னாட்டு கைகளும் இருக்கும்.
குண்டு வெடித்தவர், குண்டில் வெடித்தவர் யார் நம்மவராயினும் தனிமனிதர்கள்( அவர்களிடம் உள்ள தகவல்கள் மிகக் குறைவே!) பதிலடி/ வெறுப்பு எனப் போகாமல் அரசிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைப்பதே நல்லது.
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சமயம் அதை நேரடியாக காட்டிய அமெரிக்க டிவிக்கள்.. எந்த குழப்பத்தையும் மக்களிடம் தூபம் போடாமல்.." Dont allow the hatred to win us!" என்று ஸ்க்ரோல் ஓடவிட்டனர்.
உள்நாட்டில் உயர் விழுமியங்களைப் பேணும் அமெரிக்க மக்கள் தம் அரசின் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.
தெனாலியில் கமல் சொல்வதாக ஒருவசனம் வரும்...,"அப்போ நான் சின்னப்பிள்ள இந்த பிரச்னை விளங்கேல..இப்பவும்...விளங்கேல!"
என்று கண்ணைத் துடைத்துக் கொள்வார்.
'நியூசிலாந்து துயரத்திற்கு பதிலடி
கொழும்பு சர்ச்சில் அல்ல"...என உறுதி கொள்வோம்.
"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்..."
இலங்கை அரசின் கடமை.
இழப்பை எதிரபாராமல் சந்திக்கும் இலங்கைக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக